நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Friday, October 22nd, 2021

நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியதாகவும் நாட்டில் எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் முன்கூட்டியே தான் சொல்வேன் என்று உறுதி வழங்கிய தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் செப்டெம்பர் 29 ஆம் திகதிக்குள் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற வற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தான் கூறிய தாகவும் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவ டிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேநேரம் எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் அரசாங்கத்திடமிருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: