சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, December 4th, 2023

கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான சான்றிதழ்களை இணையவழியில் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி தற்போது பரவி வருகின்றது.

அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், அவ்வாறு எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும் இவ்வாறான பரீட்சை மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு அப்பால் துல்லியமான தரவுகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வழமைக்குத் திரும்பியதும் வாகனங்கள் இறக்குமதி செய்ய...
சிறையிலுள்ள உறவுகளைப்பார்க்க இன்றுமுதல் மீண்டும் அனுமதி - சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை!
பொருளாதார நெருக்கடியிலும் அதிகளவில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் - பிரிதானியாவிலிருந்து அதிக சுற்று...