பொருளாதார நெருக்கடியிலும் அதிகளவில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் – பிரிதானியாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை என துறைசார் அதிகார சபை தெரிவிப்பு!

Friday, August 12th, 2022

பொருளாதார குழப்பம் இருந்தபோதிலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) மாதாந்த அறிக்கையின்படி ஜூலை மாதத்தில் 47,293 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில் பிரிதானியாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியா, ஜெர்மனி இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளதோடு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இங்கிலாந்திலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதோடு அதன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பயண ஆலோசனை இருந்தபோதிலும் 9,257 வருகைகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், வருகையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக ஆதாரங்கள் முறையே இந்தியா (6,031 வருகைகள்) மற்றும் ஜெர்மனி (3,666 வருகைகள்) ஆகும். மேற்கூறிய நாடுகளைத் தவிர, பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ஸ்பெயின் ஆகியவை ஜூலை 2022 இல் இலங்கைக்கான முதல் பத்து சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக இருந்தன.

பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி, பாகிஸ்தான், ஸ்வீடன், ஈரான், ருமேனியா, அயர்லாந்து, பெலாரஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளையும் SLTDA சாத்தியமான சுற்றுலா சந்தைகளாக அடையாளம் கண்டுள்ளது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த SLTDA தலைவர் பிரியந்த பெர்னாண்டோ “ஜூலை முதல் 11 நாட்களில் மட்டும் இலங்கையில் 15,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: