தொடர்ந்தும் வைத்தியசாலையில் ரோஹித அபேகுணவர்தன!
Saturday, June 25th, 2016
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வட் வரி அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களை முன் நிறுத்தி கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதியில் பொலிஸாரினால் வைக்கப்பட்டிருந்த இரும்புச் சட்டங்களை தள்ளி விழுத்திய சம்பவத்தில் இவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதன்போது காயமடைந்த மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
14 வர்த்தகர்களுக்கு அபராதம்!
வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் மூன்று வீதிகள் புனரமைப்ப...
நோர்வே - இலங்கை இடையில் நல்லுறவு வலுவடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவிப்பு!
|
|
|


