நோர்வே – இலங்கை இடையில் நல்லுறவு வலுவடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 30th, 2016
நோர்வேக்கும் இலங்கைக்கு இடையிலான  நல்லுறவு  அந்நாட்டின்  வரலாற்று  சின்னமாக கருதப்படுகின்ற  சோலன்ட் (Sørlandet) பாய்மர  கப்பலின்  வருகை  மூலம்  மேலும் வலுவடைந்திருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்துள்ள கப்பலுக்கான வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் முனையத்தில் ஒழுங்குச் செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேதூதுவர் டோ பிஜோன் கௌதன் நேத்தன்  இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்;.
இதனைத் தொடர்ந்து கப்பலின் மாலுமியான   ஒட் நொர்தால் ஹென்சனுடன் (Odd Nordahl-Hansen) அமைச்சர் அர்ஜூன ரணதுங்ககப்பலை பார்வையிட்டார்.Pearl of Norway எனும் விசேட பெயரைக்கொண்டு அழைக்கப்படுகின்ற சோலன்ட் (Sørlandet)   பாய்மர கப்பல் நோர்வே நாட்டின்வரலாற்று சின்னமாகும். 1927 ம் ஆண்டு நோர்வே நாட்டின் முசளைவயைளெயனெ  நகரில் (Sørlandet)   எனும் கப்பற்முனையத்தில் கட்டப்பட்டது.
இக்கப்பல் தன்னுடைய முதலாவது கன்னிப்பயணத்தை ஒஸ்லோ நகரிற்கு மேற்கொண்டது. அன்றுதொடக்கம் 90 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக  கப்பல் கடற் பயணங்களை மேற்கொண்டுவருகிறது. இரண்டாம் உலக போரின்பொழுது சிறைகைதிகளை தடுத்து வைப்பதற்காக இக்கப்பல் பயன்படுத்தப்பட்டது.
கடல்சாரந்த் கற்கை நெறிகளை பயிலும் இலங்கை மாணவர்களுக்கும் கப்பலில் வருகை தந்துள்ள 70 மாணவர்களுக்கும்இடையில் அனுபவப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும்  இடம்பெற்றன.

d7e59ba07b7fec2d8a4c691b95414fc9_XL

Related posts: