தேர்தல்கள் காலதாமதமின்றி உரிய தினத்தில் நடத்தப்பட வேண்டும் – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி!
Saturday, August 12th, 2017
மாகாண சபை தேர்தல்கள் காலதாமதமின்றி உரிய தினத்தில் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இதற்கமைய மாகாண சபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் கொண்டு வரப்படவுள்ள 20 ஆம் சீர்த்திருத்தம் தொடர்பில் மீண்டும் ஆராய இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் கைது
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு ஐ.நா பாராட்டு!
அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக...
|
|
|


