இறுக்கை பட்டி அணியாததால் வவுனியாவில் ஒருவர் பரிதாபமாக பலி!

Saturday, January 14th, 2017

வவுனியா செட்டிகுளம் பெரியகட்டுப் பகுதியில், வேமாக சென்ற டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, வீதியில் போடப்பட்டிருந்த வேகத் தடையினை கண்டு வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது, முன் கண்ணாடி ஊடாக தூக்கியெறியப்பட்டு மரணமானார்.

குறித்த சாரதி இறுக்கை பட்டியை அணியாமையினாலே இந்த உயிராபத்து ஏற்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முருங்கனில் இருந்து பூனாவ நோக்கி இன்று காலை 6.30 மணியளவில் பயணித்த டிப்பர் வாகனம், வவுனியா செட்டிகுளம் பெரியகட்டுப் பகுதியில் வேகமாக பயணித்து கொண்டிருந்த போது வீதியில் போடப்பட்டிருந்த வேகத் தடையினை கவனிக்காததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன் கண்ணாடி வழியாக சாரதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

விபத்தில் முருங்கனைச் சேர்ந்த பிலிப்பு ஜேசுராஜா (வயது 55) என்பவரே மரணமடைந்தவராவார்.

வாகனத்தை செலுத்திய சாரதி இருக்கைப் பட்டி அணியவில்லை. இதன் காரணமாகவே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

seat-belt

Related posts:

பெரும்பான்மை மக்களுடன் தமிழ் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழவேண்டியதொரு காலக்கட்டம் - அமைச்சர் டி.எம்.சு...
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபை...
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள...