தென்மாராட்சியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!

தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று வைத்தியசாலைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதத்தில் 60 பேரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நேற்று முன்தினம் வரை 25பேரும் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இந்த வைத்தியசாலையில் டெங்கு நுளம்பினால் 302 பேரும், உண்ணிக்காய்ச்சலால் 92 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.
Related posts:
12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் - தனிமைப்படுத்தப்பட்டனர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயக...
அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் - ராஜாங்க அமைச்சர்...
ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயில் ஆரம்பம் !
|
|