9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் – கர்தினால்!

Monday, September 12th, 2016
இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற மேற்­கு­ல­கத்தின் கொள்­கையை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை கிடையாது எனத் தெரி­வித்­துள்ள கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது ஷரத்து நீக்­கப்­படக் கூடாது என்றும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

கம்­பஹா மாவட்­டத்தில் திரு இரு­த­ய­நாதர் தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரையாற்­று­கை­யி­லேயே பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இவ்­வாறு கருத்து வெளியிட்­டுள்ளார்.

ஆண்­டகை அங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற கொள்கையை கடை­பி­டிக்க வேண்­டு­மென்றும் அதனை புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்க்க வேண்டு­மென்றும் மேற்­கு­லக நாடு­களின் கொள்கை எம்­மீது திணிக்­கப்­ப­டு­வ­தற்கு முயற்­சிகள் எடுக்கப்­ப­டு­கின்­றன.

இதனை நாம் நிரா­க­ரிக்க வேண்டும். மதம்இ கலா­சார விழு­மி­யங்­களை கடைப்­பி­டித்த வாழ்வின் கார­ண­மா­கவே இலங்­கையில் ஒழுக்க விழு­மி­யங்­க­ளுக்­கான சமூக கட்­ட­மைப்பு உரு­வா­கி­யுள்­ளது. எனவே மதச்­சார்­பற்ற நாடு எங்­க­ளுக்கு பொருத்­த­மா­ன­தல்ல. 2600 வரு­டங்­க­ளுக்கு மேலான மதக் கலா­சாரம் எமக்கு உள்­ளது. அதனை நீக்­கு­வது சமூக கட்­ட­மைப்பை சீர்­கு­லைக்கும்.

அதே­வேளை அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது ஷரத்து தொடர்ந்தும் பாது­காப்­ப­தாக žஜனா­தி­பதி உறுதியளித்­துள்ளார். இதனை வர­வேற்­கின்றோம். அதா­வது இலங்கை ஜன­நா­யக குடி­ய­ரசின் அதி முக்­கியம் வாய்ந்த இடத்தை பெளத்த மதத்­திற்கு வழங்கி அதனை போசிப்­பது பாது­காப்­பது அரசின் முக்­கிய கட­மை­யாகும்.

அதேவேளை, ஏனைய மதங்களையும் அரசு பாதுகாக்கும் என்ற ஷரத்து இலங்கையின் அரசியலமைப்பில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

dcp0253

Related posts: