தீவுப்பகுதி பயணங்களுக்கு பாதுகாப்பான படகு சேவைகள்!

Saturday, September 3rd, 2016

யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் உள்ள தீவுகளுக்கு மிக விரைவில் பாதுகாப்பான படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக கப்பல் செயலகத்தின் உப அலுவலகம் ஒன்றை ஊர்காவற்துறையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதற்கு முன்னர், ஊர்காவற்துறையில் இருந்து புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு ஆகியவற்றுக்கு பாதுகாப்பான படகுச் சேவைகள் இல்லை.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் அனைத்து பிரதேசங்களையும் ஒரே அளவில் அபிவிருத்தி செய்யும். கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் சுமையில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அனைத்து தடைகளுக்கு மத்தியிலும் தற்போதைய அரசாங்கம் அனைத்துப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் குறித்து பல தடவைகள் துறைசார்ந்தவர்களிடம் வலியுறுத்தியருந்தமைகுறிப்பிடத்தக்கது.

1207288726Arjuna

Related posts: