அபராதத் தொகை அதிகரிப்பு  முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டத்தில்!

Monday, November 14th, 2016

மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டி தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்

அபராதத் தொகை 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக அரசாங்கம் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தப்படும் என இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டி தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

நாம் இந்த அபராதத் தொகை அதிகரிப்பினை எதிர்க்கின்றோம்.முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசாங்கம் எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை.முச்சக்கர வண்டி தொழிலில் ஈடுபடுவோர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் குறைந்த பட்ச அபராதம் இதுவரையில் 20 ரூபாவாக காணப்பட்டது. தற்போது இந்தத் தொகை 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு தொகை உயர்த்தப்பட்டமையை நாம் எதிர்க்கின்றோம்.

கட்டண அதிகரிப்பு குறித்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால் , முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சாரதிகளை இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

5936364-Three_wheelers-0

Related posts: