தாய்மாருக்கானதாக மாறிவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை:  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி !

Friday, October 14th, 2016

தரம் 5 புலமைப் பரிசில் என்பது தாய்மாருக்கான பரீட்சையாக மாறிவருகின்றது. சிறார்களின் விருப்புக்கும், அன்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் கல்விக்கு இடம்கொடுங்கள். இவ்வாறு வவுனியா தேசியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க.பேர்ணாட் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஓமந்தை அரச ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தொவித்ததாவது –

தற்போதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்றால் மாணவர்களின் தாய்மார்கள் படும்பாட்டைச் சொல்லில் அடக்க முடியாது. தாய்மாருக்கிடையே ஒரு போட்டியே நடைபெறுகின்றது. தாயின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாணவன் சித்தியடைய வேண்டும்.

க.பொ.த சாதாரண தரம், உயர்தரத்தின் தன் விருப்புக்கு ஏற்றவாறு மாணவன் சிதிதியடைய வேண்டும் என்பது தந்தைகளின் விருப்பம். சிறார்களின் விருப்புக்கும், அன்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் கல்விக்கு இடம்கொடுங்கள். ஆலயங்களில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. ஆலயங்கள் ஆன்மீகத்தை வளாக்கும். இங்கு மாணவர்ளும் பெற்றோரும் அதிக விடங்கள் கற்றுக்கொள்வார்கள் – என்றார்.

grade-v-exam

 

Related posts:

காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை - வெளிவிவகார அமைச...
ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது - பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்...
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ...