83% ஆசிரியர் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021

நாட்டிலுள்ள படசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 83 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சரின் கூற்றுப்படி மேல் மாகாணத்தில்  97% ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊவா மகாணத்தில் 95%,  மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 84%, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 83%, வட மாகாணத்தில் 82%, கிழக்கு மாகாணம் 74% , சப்ரகமுவ மாகாணத்தில் 52% ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் குறைந்தது முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகஸ்ட் இறுதிக்குள் ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பூசி வழங்கப்பட்டதன் பிறகு சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: