தனியார் ஊடகங்கள் அரசை விமர்சிக்கின்றன!- ஜனாதிபதி!

Friday, July 8th, 2016

நாட்டிலள்ள தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் அனைத்தும், அரசை விமர்சிக்கும் விதமாகவே செயற்படுகிறது என ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

குறித்த ஊடகங்களில் 80 வீதமான நேரங்கள் அரசை விமர்சிப்பதாகவும், அரசின்கொள்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த 20 வீதமான நேரத்தையே ஊடகங்கள் ஒதுக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படியிலேயே இதனை தெரிவிப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். ஒன்றரை வருட ஆட்சியை மட்டுமே கடந்துள்ள இந்த அரசை இலங்கையின் தனியார் ஊடகங்கள் இவ்வாறு விமர்சிக்கும்போது இந்த அரசு மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே இலங்கையின் தனியார் ஊடகங்கள் இதனைவிட சாதாரணமாக நடந்து கொள்ள வேண்டும்எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக மேலும் செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts: