உருளைக் கிழங்கின் விலை வீழ்ச்சியால் சந்தை வாய்ப்பின்றி சிரமப்படும் விவசாயிகள்!

Monday, February 19th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் தாம் அறுவடை செய்யும் உருளைக்கிழங்கை சந்தைப்படுத்த முடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.

உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சியால் போதிய சந்தை வாய்ப்பின்றி பாதிக்கப்படுகின்றனர் என மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியான விற்பனை கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் செயலாளர் ரி.சதீஸ்குமார் தெரிவித்தார்.

இந்த முறை போகத்தின் போது சுமார் 4680 அந்தர் விதை கிழங்குகள் பெறப்பட்டு மானிய விலையில் செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது பயிரிடப்பட்ட உருளைக்கிழங்குகளை அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் செய்கை மூலம் எதிர்பார்த்த விளைச்சலை விவசாயிகள் பெற்றுக் கொள்ளவில்லை. அறுவடை செய்த கிழங்குகளைக்கூட சந்தையில் சந்தைப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளன. தெற்கே இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளின் விலையும் மிகவும் சரிந்தே காணப்படுகின்றன. ஆகவே உருளைக்கிழங்குச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தால் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைக்கு அரசு சாதகமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாததால் உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

Related posts: