தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச அரச பணியகங்களுக்கு புதிய நடைமுறை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, October 30th, 2020

கெரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் “வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமையை“ மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாணம் மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2020 ஏப்ரல் முதல் மே வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வீட்டிலிருந்து வேலை முறைமை“ மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களைப் பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை வழங்குவதற்கு மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிருபம் ஜனாதிபதி செயலாளர் பீ. பி ஜயசுந்தர அவர்களினால் நேற்று அனைத்து அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் பொது முகாமையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு நிறுவனத்திலும் – தொலைவிலிருந்து மேற்கொள்ளக்கூடிய பணிகள் மற்றும் வீடுகளில் இருந்து சேவைகளை மேற்கொள்ளக்கூடிய ஊழியர்களைத் தீரமானிக்கும் அதிகாரம், அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் குறித்த கோப்புகள் மற்றும் உபகரணங்கள் உரிய அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளும் நேரம் காலை 8.30 முதல் மாலை 4.15 மணி வரையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பகளின் போது, தேவைக்கு ஏற்ப, பணி நேரங்களை மாற்றும் அதிகாரம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு உண்டு. வீடுகளில் இருந்து பணி திட்டத்திற்கு உட்படாத ஊழியர்களை மேலதிக மனித வளம் தேவையான நிறுவனங்களுக்கு சேவையில் ஈடுபடுத்த முடியும்.

அத்துடன் “வீட்டிலிருந்து பணி புரியும்” முறைமையை செயற்திறனாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்காக மாற்று தொடர்பாடல் ஊடகங்களை பயன்படுத்துமாறும் மேற்படி சுற்றுநிருபத்தின் மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றுமு; அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல், தொலைபேசி, பயனாளர்களுக்கு வசதியான செயலிகளான வட்ஸ்அப், ஸ்கைப் போன்றன இதற்காக பயன்படுத்தப் முடியும். வீட்டிலிருந்து வேலை செய்வதற்குத் தேவையன நிதி ஏற்பாடுகளை வழங்குவது கணக்குக் கொடுக்கும் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: