லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை!

Tuesday, June 13th, 2017

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்ய முடிந்துள்ளது. இதற்கு லொத்தர் விற்பனையாளர்களின் ஆகக்கூடிய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பே என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக தென் மாகாணத்தில் அபிவிருத்தி லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி கருவிகளும், உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் இதுவரையில் இவர்களுக்காக லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்வதற்காக விற்பனைக் கூடங்களுக்கு 50 வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் எதிர்காலத்தில் இந்த விற்பனைக் கூடங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று கூறினார்.

விற்பனையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்படுமென்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டார்.

Related posts: