ஓமந்தையிலுள்ள முகாம் முற்றாக அகற்றப்படமாட்டாது – இராணுவப் பேச்சாளர்!

Friday, January 20th, 2017

இலங்கை இராணுவத்தினரின் முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த பொதுமக்களின் பெரும்பகுதியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைளினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச்சாவடி அமைந்திருந்த 16 ஏக்கர் காணிகளை வவுனியா மாவட்ட செயலாளரிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்ட்டது.

இதேவேளை ஓமந்தை இராணுவ முகாமின் வழமையான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு, குறித்த முகாம் முற்றாக அகற்றப்படமாட்டது என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரால் ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மொத்தம் 16 ஏக்கர் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளளிப்பதற்காக வவுனியா அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.குறித்த காணிகளை கையளிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் 563 பிரிகேட் கட்டளைத்தளபதி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

omanthairanuvam0-300x222

Related posts: