தேசிய போசாக்கு வேலைத்திட்டத்திற்கு 28.2 பில்லியன்!

Thursday, August 31st, 2017

தேசிய போசாக்கு வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 5 வருட காலப்பகுதிக்குள் பெருந்தொகை நிதி ஒதுக்கிடுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இத்தொகை 28.2 பில்லியன்களாக அமைந்திருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். “Health Sector Cost of National Nutrition Programme of Sri Lanka”  என்ற அறிக்கையை வெளியிடும் வைபவத்தில் அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார்.

இது தொடர்பான வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.சிறப்பான சுகாதாரத்திற்கான போசாக்கு நிறைந்த உணவு இருக்கவேண்டும் என்று சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.

உணவுப்பொருட்களை கொள்வனது செய்யும் பொழுது அதற்காக செலுத்தப்படும் பணத்திற்கான பெறுமதியை கொண்ட உணவுப்பெறுமதியை போன்று போசாக்கு நிறைந்த உணவைப்பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்

Related posts: