விவசாயிகளுக்கு கடன் வழங்க தீர்மானம் – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!

Friday, April 17th, 2020

36 வகையான பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபாவரையான கடன் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த கடன் திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளினால் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளதுடன், 9 மாத தவணை அடிப்படையில் கடனை மீள செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சபிரி’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கடன் திட்டம் 4 வீத வட்டி அடிப்படையில் வழங்கப்படுகின்றது. நெல், மிளகாய், வெங்காயம், கௌப்பி, சோயா உள்ளிட்ட தானிய செய்கையாளர்கள் மற்றும் போஞ்சி, கோவா, கரட் உள்ளிட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது.

அத்துடன் ஒரு வீட்டுத்தோட்டத்திற்கு 40,000 ரூபா என்பதன் அடிப்படையில் வழங்கப்படும் இந்தக் கடன் திட்டத்தின் 5 வீத வட்டியை அரசாங்கம் செலுத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: