குழந்தை அத்தியவசியமற்றதானால் அரசிடம் ஒப்படையுங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

Monday, March 2nd, 2020

தாயொருவர்தமது குழந்தை அத்தியவசியமற்றது எனகருதும் பட்சத்தில், அந்த குழந்தையை ஒப்படைப்பதற்காகநாடு முழுவதும் 9 மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்குதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானிக்கவுள்ளது.

பிறந்ததுமுதல் ஒரு வயது வரையானகுழந்தைகளை குறித்த மத்திய நிலையங்களில்ஒப்படைக்க முடியும் என அதிகார சபையின்தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களில், சிசுக்கள்கொலை செய்யப்பட்டதுடன் கைவிடப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தன.

இவ்வாறானநிலைமையை குறைக்கும் வகையில், சிசுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளைமத்திய நிலையங்களில் ஒப்படைக்கும் போது, குழந்தையின்பெற்றோரிடம் எந்த காரணங்களும்வினவப்பட மாட்டாது எனவும் பேராசிரியர் முதித்தவிதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குழந்தைகள்வளர்ந்தவுடன், அவர்களை சிறுவர் நிலையங்களுக்குஅல்லது குழந்தைகளை தத்தெடுப்போருக்கு சட்டரீதியாக ஒப்படைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமெனவும்தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

Related posts: