விபத்துக்களில் கைகளை இழந்தவர்களுக்கு செயற்கைக் கரம் !

Saturday, September 30th, 2017

பல்வேறு விபத்துக்களின் போது கைகளை இழந்த 200 நபர்களுக்கு செயற்கைக் கரங்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை ஹெல்பின் ஹேண்ட் நிதியம் மேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரோட்டரி கழகத்துடன் இணைந்து பத்தரமுல்லை ரோட்டரி கழகம் மற்றும் ஹெல்பின் ஹேண்ட் நிதியம் என்பன ,இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.

இதற்காக தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு செயற்கைக் கரங்கள் பொருத்துவது மட்டுமன்றி அதற்கான மருத்துவ பரிசோதனைகள், போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்கான செலவுகளையும் இந்த நிதியம் ஏற்றுக் கொள்ளவுள்ளது.கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்த நிதியத்தின் மூலமாக சுமார் 500 இலங்கையர்களுக்கு செயற்கைக் கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது

Related posts: