தனிப்பட்ட விரோதம் வாள்வெட்டில் முடிவடைந்தது: மானிப்பாயில் சம்பவம்  

Monday, July 31st, 2017
மானிப்பாயில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை( 30) மாலை இந்த வாள்வெட்டுச்  சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தனிப்பட்ட விரோதம் காரணமாக மானிப்பாய் லோட்டஸ் வீதியில் இரு இளைஞர் குழுக்கள் நேற்று மாலை வாள்களால் மோதிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மோகன் தனுராஜ்(வயது- 22) மற்றும் விக்னராஜா ஜீவராஸ்(வயது- 22) ஆகிய இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: