வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்குபற்றாதாம்?

Thursday, June 9th, 2016

நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்கெடுப்பில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பங்­கு­பற்­றப்­போ­வ­தில்லை என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்திகள் கூறுகின்றன.

நாடாளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற கூட்­ட­மைப்பின் குழுக் கூட்­டத்­தி­லேயே இந்த முடிவு எட்­டப்­பட்­டுள்­ளது இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவின் ஆத­ரவு அணி­யான ஒன்­றி­ணைந்த பொது எதிரணியால் நிதி அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை மீதான விவா­தம் நேற்று நடை­பெ­ற­வி­ருந்­த­போது சபையின் ஒலி­வாங்கி கட்­ட­மைப்பு திடீ­ரென செயற்­ப­டாது போனதன் காரண­மாக சபை நட­வ­டிக்­கைகள் இன்று காலை 9.30வரையில் ஒத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன

இந்­நி­லையில் குறித்த நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணையை ஆத­ரிப்­பதா இல்லை எதிர்ப்­பதா என்­பது தொடர்­பி­லான தீர்­மா­னத்தை நேற்று காலை 11.30 இற்கு நடை­பெறும் கூட்டமைப்பின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் எடுப்­ப­தாக நேற்று முன்­தினம் நடைபெற்ற குழு கூட்­டத்தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது

அதன் பிர­காரம் நேற்று எதிர்­க்கட்­சித்­த­லை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் நிதி அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் கூட்டமைப்பு கலந்து கொள்­ளப்­போ­வ­தில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

அத்தோடு எதிர்வரும் 25ஆம் திகதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடுவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: