உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்!

Saturday, January 7th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியாவினால் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர் அங்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகிறது. இந்தநிலையில், இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆகிய திகதிகளில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.

அண்டை நாடுகளின் தலைவர்களை தவிர, ஆப்பிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராட்சியம், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள் அமர்வுகள் நிதி, சுற்றுச்சூழல், வெளியுறவு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தக நிலைகளில் “உலகளாவிய தெற்கின் குரல்”மாநாடு நடைபெறவுள்ளது.

நான்கு அமர்வுகள் ஜனவரி 12ஆம் திகதியும், ஆறு அமர்வுகள் ஜனவரி 13ஆம் திகதியும் நடைபெறும். மொத்தத்தில் இந்த மாநாட்டுக்காக புதுதில்லி 120 நாடுகளுக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தென்னாசிய நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம் -பிரதமர்
காயங்களை ஆற்றுவதன் ஊடாக எதிர்காலத்தை வென்றெடுப்போம் - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்!
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது...