தென்னாசிய நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம் -பிரதமர்

Wednesday, August 3rd, 2016

தென்னாசிய நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்த மேலும் எதிர்பார்த்துள்ளோம்என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் நடைபெறும் 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துகொண்டார். இம்மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.. மேலும் அவர்’ உரையாற்றுகையில் –

எமது அரசாங்கம் தற்போது திருகோணமலை பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரித்து, சிங்கப்பூரின் சுபானா ஜூரொங் நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டுள்ளது. இந்த வருட இறுதியில் இந்திய அரசாங்கத்துடனான, பொருளதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையைப் பூரணப்படுத்துவதற்கு எண்ணியுள்ளோம்.

அடுத்த வருடம் சீன நிறுவனமொன்றுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றைப் பூரணப்படுத்த எண்ணியுள்ளோம். சிங்கப்பூருடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் ஜப்பானுடன் நெருங்கிய பொருளாதார உடன்படிக்கையொன்றை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், தெற்காசியாவிலுள்ள எமது அயல் நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்

Related posts: