டெங்கு பரவும் சூழல்: நால்வருக்கு அபராதம்!

டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த நால்வருக்கு தலா இரண்டாயிரம் ரூபா மல்லாகம் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரனால் அபராதமாக விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய், சுதுமலை, ஆனைக் கோட்டை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பரிசோதனை நடவடிக்கையில் டெங்கு பரவக் கூடிய நிலையில் சூழலை வைத்திருந்த நால்வருக்கு எதிராக மானிப்பாய்ப் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நால்வருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறுமியைத் தாக்கிய வளர்ப்புத் தாய்க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் சோதனையிட விசேட வேலைத்திட்டம்!
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகா...
|
|