பேருந்தை தாக்கிய குற்றச்சாட்டில் கைதானோருக்கு மறியல் நீடிப்பு!

Tuesday, November 1st, 2016

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து சண்டித்தனம் புரிவோருக்கு இலகுவில் பிணை வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்று, பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பிணை மறுத்து மறியலை நீடித்தது. இந்த மாதம் 12ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த காரைநகர் சாலைக்குரிய இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமாக பேருந்தை யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வழிமறித்த பட்டா வாகனத்தில் வந்த இளைஞர்கள் அதனுள் ஏறி சாரதியையும் நடத்துனரையும் அச்சுறுத்தியதுடன் நடத்துனரின் கையிலிருந்த பற்றுச்சீட்டு புத்தகம், பணம் ஆகியவற்றைப் பறித்தனர். பின்னர் பேருந்தைத் தாக்கி சேதப்படுத்தினர் என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பாக பொலிஸார் அந்தப் பகுதியில் விசாரணை நடத்திக் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பருத்தித்துறையை சேர்ந்த 12 இளைஞர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. தாக்குதலால் பேருந்து 2 இலட்சத்து 23ஆயிரம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், அடுத்த வழக்குத் தவணையின் போது உதவிப் பொலிஸ் அத்தியகட்சரின் அறிக்கையுடன் பொதுச்சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய  உத்தேசிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்களையும் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். இலங்கைப் போக்குவரத்துச்சபை சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பேருந்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கினால் இணக்கமாகச் செல்வதற்குத் தாம் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர். அதனை நிராகரித்த பதில் நீதிவான் க.அரியநாயகம் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து சண்டித்தனம் புரிவோருக்கு இலகுவில் பிணை வழங்க முடியாது என்று தெரிவித்து அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குதாறு உத்தரவிட்டார்

26-1469543338-jail4-600

Related posts: