மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Friday, January 5th, 2024


………..
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது

எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது. என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் வலியுறுத்தினார்.

மேலும் மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து  பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, தற்போது மேல்மாகாணத்திற்கு மட்டுமே நிதி சுதந்திரம் காணப்படுவதாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

Related posts:

பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமா...
அரசாங்க வேலைத்திட்டங்களை சீர்குலைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் - ஜனாதிபதி ரணில் வ...
ஜனவரியில் உயர்தரப் பரீட்சை - டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!