அரசாங்க வேலைத்திட்டங்களை சீர்குலைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை!

Sunday, January 29th, 2023

அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் எந்த வகையிலும் சீர்குலைக்கப்பட்டால், இலங்கை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாயத் திட்டமும், ஐ.எம்.எப். திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தையும் சுட்டிக்காட்டினார்.

குறித்த திட்டங்கள் சீர்குலைந்தால், கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தைப் போல் நாடு மீண்டும் நெருக்கடியில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 15 சதவீதமாக காணப்பட்டது. எனினும், அதன்பின்னர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக குறைவடைந்தது என சுட்டிக்காட்டினார்.

குறித்த வருடங்களில் வழங்கப்பட்ட வரிச்சலுகை நாட்டின் பொருளாதர நெருக்கடிக்கு காரணமானது என்றும் 2024ல் இருந்து பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: