வடக்கின் அடுத்த பிரதி அவைத் தலைவர் யார் ? மாகாண சபை அமர்வில் ஆளுங்கட்சிக்குள் மோதல்!

Thursday, October 27th, 2016

வட மாகாண சபைக்கு பிரதி அவைத் தலைவரை நியமிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை உள்ளடக்கிய ஆளும்தரப்பினர் மத்தியில் கடும் வாதப்பிதிவாதங்கள் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் மரியம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இடத்தை நிரப்புவதற்காக இன்றையதினம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், குறித்த தெரிவை மேற்கொள்ளவேண்டாம் என அவர் அவைத்தலைவருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமையில் அவையின் 64 கூட்டத்தொடரில் குறித்த தெரிவு தொடர்பாக முன்மொழியப்பட்டதைத் தொடர்ந்து ஆளுங்கட்சிக்குள் கடும் இழுபறிநிலை ஏற்பட்டது.

இதனிடையே குறித்த நியமனத்திற்கு தமிழரசுக்கட்சி சார்பான அனந்தி சசிதரன் மற்றும் முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் கமலேஸ்வரன் அகிய இருவர் முன்மொழியப் பட்டதுடன் இவர்களில் ஒருவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

வடக்கின் ஆட்சிப்பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்ற காலத்திலிருந்து பல்வேறுபட்ட குழப்பங்களை விழைவித்துவரும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்றையதினம் பிரதி அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டனர். மேலும் தேர்தல்காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து தமது பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் தமது கட்சிக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டுள்ளதை தவிர மக்களது நலன்சார்ந்த விடயங்கள் எதனையும் முன்னிறுத்தி இதுவரை எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1549537_198225150384809_765951259_n copy

Related posts:


வடலியடைப்பு கலைவாணி முன்பள்ளிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
மாணவர் நலன்கருதி போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் - வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தின்...
இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏ...