மாணவர் நலன்கருதி போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தின் கோரிக்கைக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை!

Friday, March 19th, 2021

தீவக பகுதிகளில் உள்ள பாடசாலை மணவர்களினதும் அரச ஊழியர்களதும் நலன்களை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்து பேருந்துகள் சேவையிலீடுபடுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி அனுசியா ஜெகயாந்த் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக துரிதகதியில் குறித்த சேவையை மேற்கொள்வதற்கான நடடிக்கையை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே இவ்வாறு  கோரியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

மாணவர்களை மையப்படுத்தி புங்குடுதீவிலிருந்து கடந்தகாலங்களில் குறித்த சேவை மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தபோதிலும் பாடசாலைகள் 7.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அச்சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் எமது தீவக பகுதியிலிருந்து குறிப்பாக வேலணை, புங்குடுதீவு மண்டைதீவு ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் மாணவர்களும் எமது பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவர்களும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு செல்லும் நோயளர் சிரமங்களை கருத்திற்கொண்டும் குறித்த பேருந்து சேவையை வைத்தியசாலை வரை நீடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போக்கவரத்து அமைச்சர் குறித்த பாடசாலை சேவையை மீண்டும் சேவையிலீடுபடுத்துமாறும் புங்குடுதீவு வைத்தியசாலைவரை சேவைகளை முன்னெடுக்குமாறும்  விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: