தேசிய பாடசாலைகளில் பணி புரியும் கல்வி சாரா ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பில் மீள்பரிசிலனை தேவை!

Tuesday, March 20th, 2018

தேசிய பாடசாலைகளில் கடமை புரியும் கல்வி சாரா ஊழியாகளின் கடமை நேரம் தொடர்பில் மீள் பரிசிலனை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கேரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஊழியர்களின் கடைமை நோரம் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 3.15 மணியென சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் இது அனைத்து ஊழியர்களுக்கு பொருந்தாது எனவே குறித்த விடயத்தை அவதானத்தில்கொள்ளுமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கல்வி அமைச்சின் செயலாளரிற்கு கடிதம் மூலம் இக் கேரிக்கையை விடுத்துள்ளார்

குறித்த கடித்தில் – தேசிய பாடசலைகளில் கடமை புரியும் கல்வி சரா ஊழியர்கள் கடமைக்காக பாடசாலைக்கு வரும் நேரம் 20ஃ2013 சுற்றறிக்கை பற்றி 7 இல் முற்பகல் 7.30 மணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் தினவரவுப் பதிவுகள் இயந்திரங்கள் மூலமாக பதிவு செய்வதாலும் அதிபர்களது சில இறுக்கமான செயற்பாடுகள் காரணமாகவும் கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்

அதிபர்களது கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலை கடமை முடிந்து செல்லும் நேரம் தொடர்பில் வெவ்வேறு செயற்பாடுகளை மேற் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாக கல்வி சாரா ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பான தெளிவான சுற்றறிக்கை வெளியிடப்பட வேண்டும் 20ஃ2013 பற்றி நோக்கும் போதும் காலை 7.30 மணிக்குச் சமூகமளித்து பிற்பகல் 3.15 மணிக்குச் செல்ல வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிபரது அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு பொருந்தும். இது எல்லா ஊமியர்களுக்கும் பொருந்தாது பாடசாலைகளில் கடமை புரியும் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு கடமைகளைச் செய்கின்றனர்.

20
அவ்வாறான சுற்றிக்கை 2006ஃ26 க்கு அமைவாக அரை மணிநேரம் பிந்திச் செல்ல ஆவன செய்ய வேண்டும் அதை விடுத்து 3.15 மணிக்குத்தான் செல்ல வேண்டுமென்று கூறுவது நியாயமாகாது அவர்களுக்கு பொது நிர்வாக சுற்றறிக்கை 9ஃ2006 , 3ஃ92 இல் கூறப்பட்டுள்ள சலுகைகள் வழங்கப்பட வேண்டியதுடன் 20ஃ2013 சுற்றறிக்கையின் பந்தி 07 இனை திருத்தி மேற்படி ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: