டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழப்பு!
Monday, August 15th, 2016
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 34,500 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட சமூக வைத்திய நிபுணர் பிரஸிலா சமரவீர தெரிவித்தார். கடந்தவருடம் 29,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதாகவும், அதனுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு நோயினால் பீடிக்கபட்டவர்களின் எண்ணிக் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி,மாத்தறை,காலி,குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அதிகளவனாவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. எனவே, டெங்கு நோய் பரவும் இடங்களை துப்பரவு செய்து நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசி டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
Related posts:
|
|
|


