நாடாளுமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது: லக்ஷ்மன் கிரியல்ல

Monday, May 9th, 2016

நாடாளுமன்றின் விவகாரங்களில் தலையீடு செய்ய உச்ச நீதிமன்றிற்கு முடியாதென உயர்கல்வி அமைச்சரும், அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரம்புக்வெல்ல பிரதேசத்தில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடாந்தும் கூறுகையில்…

அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக கடமையாற்றிய காலத்தில் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றின் விவகாரங்களில் தலையீடு செய்ய உரிமையில்லை என தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தார்.

அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறை நிரப்புப் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பின் போது முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் இது தொடர்பில் உச்ச நீதிமன்றின் உதவியை நாட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். எனினும் அவ்வாறு உச்ச நீதிமன்றின் உதவியை நாடாளுமன்ற உள் விவகாரங்களில் பெற்றுக்கொள்ள முடியாது.

நாடாளுமன்றில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து அனைவரும் அறிந்துள்ளனர்.

தங்களுக்கு தோல்வியடைய நேரிடும் என கடந்த அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. எனினும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தோல்வியைத் தழுவியது. தற்போது தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பிரதிபலிக்கின்றனர்.

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத நபர்கள் நாடாளுமன்ற விவகாரங்களை குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.

குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவாக 33 வாக்குகளும், எதிராக 31 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும், கூட்டு எதிர்க்கட்சியினர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லலை. மீளவும் வாக்குகளை எண்ணுவதற்கு அவகாசம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகா...
தவறான செயற்பாடுகள் காரணமாக 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங...
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – யாழ். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாளை மீண்டும் ஆராயப்படும் -...