பெண்களது உரிமைகள் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தவில்லை : குற்றஞ்சாட்டுகின்றது மனித உரிமை கண்காணிப்பகம்!

Saturday, March 4th, 2017

பெண்கள் உரிமைகள் தொடர்பில் இலங்கை உரிய கவனம் செலுத்துவதில்லை என்று மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ஆம்  அமர்வுகளுக்கு சமாந்திரமாக மனித உரிமை விவகாரங்கள் குறித்த குழு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான ஓர் அமர்வில் இலங்கைப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு அரச தரப்பு உரிய பதில்களை அளிக்கத் தவறியுள்ளது. என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச பிரதிநிதிகள் இந்த அமர்வுகளின் போது அயத்தமாக வரவில்லை அல்லது கேள்விகளை உதாசீனம் செய்திருந்தனர் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அட்ம்ஸ் தெரிவித்துள்ளார். திருமணச் சட்டங்கள், காணி, வாழ்வாதரப் பிரச்சினைகள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை உரிய பதிலை செலுத்தத் தவறியுள்ளது. என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். உண்மையை கண்டறிந்து கொள்வதற்கான தற்போதைய முனைப்புகளில் பெண்களின் பங்களிப்புத் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு இலங்கை அரசு பிரதிநிதிகள் பதில் எதனையும் அளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

HRW

Related posts: