டூனா மீன் உற்பத்தித்துறையை மேம்படுத்த புதிய செயற்திட்டம்!

மீன் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் கடற்றொழில் அமைச்சும் இணைந்துடூனா மீன் உற்பத்தித் துறையை மேம்படுத்து வதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தம் கடற்றொழில் அமைச்சில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, சங்கத்தின் தலைவர் பிரபாத் சுபசிங்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகையின் மூலம் கடற்றொழில் துறைக்கே கூடுதல் நன்மை கிடைப்பதாக நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மஹந்த அமரவீர தெரிவித்தார். இதன் மூலம் 18 சதவீதத்திற்கும் 22 சதவீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்திலான வரிச்சலுகை கிடைக்கவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கூடுகிறது அமைச்சரவை - இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்ப...
|
|