கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்

Thursday, April 7th, 2016

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நேற்று (6) பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளிநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பதில் கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இராதாகிருஷ்ணன் பதில் கல்வி அமைச்சராக தனது பணியை முன்னெடுக்கவுள்ளார்.

இலங்கையின் கல்வி வரலாற்றில் தமிழ் மொழி பேசும் கல்வி இராஜங்க அமைச்சராக இதற்கு முன்னர் ராஜமனோகரி குலேந்திரன் காணப்பட்ட நிலையில், தற்போது இராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பதில் கல்வி அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:


வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் 3 கோணங்களில் தீவிர விசாரணை - பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண தெர...
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை...
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு - நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...