பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Monday, December 16th, 2019


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

இது போன்ற மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை பயன்படுத்தி அதேபோல் ஜனாதிபதி செயலகத்தில் பணிப்புரிவதாக தெரிவித்தும் சிலர் பொதுமக்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுதருவதாக பொய்கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அறிக்கை ஒன்றை விடுத்து ஜனாதிபதி ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவ்வாறான செயற்பாடுகளில் வஞ்சிக்கப்பட வேண்டாம் எனவும் ஜனாதிபதி செயலகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

இதேவேளை கால்டன் முன்பள்ளியின் வருடாந்த இசை நிகழ்ச்சி ருவூணு மாகாம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை ஜனாதிபதி இன்று டுமிசா மஹாடு திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார். இதேவேளை ஹம்பாந்தோட்டை நகர சபையில் அமைக்கப்பட்டுள்ள சேதன பசளை தயாரிக்கும் இடத்தில் அமைந்துள்ள தேசிய திண்ம கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தையும் ஜனாதிபதி கண்காணித்தார்.

நாள் ஒன்றுக்கு 50 டொன் திண்ம கழிவுகளை சேதன பசளையாக மாற்றக்கூடிய இந்த திட்டத்தை விரைவுப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Related posts: