ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவித்தலை ஏற்க முடியாது – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

சர்ச்சைக்குரிய மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவித்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொலிஸார் பல்கலைக்கழக மாணவர் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மாலபே சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளிவரும் வரையில் அந்நிறுவனத்திற்கு மாணவர்களைச் சேர்த்தல் மற்றும் பட்டம் வழங்குதல் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மங்கள மத்துமகே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|