ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல் பீரிஸ் நீக்கம்!

Sunday, March 5th, 2023

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல் பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் கல்வி அமைச்சருக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் இதில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது வெற்றிடமாக உள்ள பதவிக்கு பொருத்தமான நபர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பரிசீலித்து வருவதாகவும், சிவில் சமூகத்தினரிடையே புகழ்பெற்ற மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர் ஒருவர் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் நிறைவேற்று சபை கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்க உள்ளதாக காரியவசம், உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக...
ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகண்டது தமிழ் தேசிய கூட்...
இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ...