யோசனையை சீனா நிராகரிப்பு!

Sunday, July 31st, 2016

மத்தள மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கான நிதித்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையைசீனா ஏற்க மறுத்துள்ளது.

இவ்வாறான மாற்றங்களுக்கு சீன சட்டத்தில் இடமில்லை. இந்தநிலையில் சீன முதலீட்டாளர்களுடன் பேசியே இது தொடர்பில் முடிவெடுக்க முடியும் என்றுசீன தூதுவர் யி ஸியான்லிங்  தெரிவித்துள்ளார்.

எனினும் மத்தள விமானநிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் இயக்கங்களுக்காக ஏற்கனவே சீனா, பல நிறுவனங்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையின் அபிவிருத்திகளை ஒருங்கிணைக்கும் முகமாக அம்பாந்தோட்டை அபிவிருத்திகூட்டுத்தாபனம் ஒன்றை அமைக்க அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையிலேயே பிரதமரின்இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவின் பிரதான நிர்மாணத்திட்டமான “போட்சிட்டி”எதிர்வரும் ஒக்டோபரில்மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts: