ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் – 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தகவல்!
Monday, December 26th, 2022
எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் 5 மற்றும் 10 ஆம் திகதிக்குள் கலைக்கப்படும் என தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் திகதியை ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிப்போம் என தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது!
கோப் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த கடமைப்பட்டுள்ளேன் - அமைச்சர் நாமல் ராஜபக்ச!
2025 ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக...
|
|
|


