அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு உயிர் கொல்லி நோய்!

Wednesday, March 29th, 2017

டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காய்ச்சல், உடல் வலி, தும்மல், தலைவலி, போன்ற அறிகுறிகள் இந்த நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும் எனவும்சுட்டிக்காட்டிய மருத்தவர் இரத்தம் பரிசோதிக்கும் போது இரத்த எண்ணிக்கை குறைவாக காணப்படலாம். எனினும் சில சந்தர்ப்பங்களில் அது டெங்கு அற்ற வைரஸ் தொற்றாக இருக்கலாம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

கைக்குட்டை பயன்படுத்தல், கை முழங்கை, வாய் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளை மூடிக் கொள்வதன் ஊடாக மற்றுமொறு நபருக்கு தொற்றுவதனை தவிர்க்கலாம் என மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.காய்ச்சல் ஏற்பட்டால், ஓய்வு எடுப்பது கட்டாயம் எனவும், பாடசாலை செல்லும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு புதிய மாற்றத்தை தரும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஸ...
வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...
நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் - வ...