சுகாதார பரிசோதகர் போல் பாசாங்கு செய்து சங்கிலி அறுப்பு- கரணவாய் தெற்கில் சம்பவம்!

சுகாதார பரிசோதகர் என கூறிக்கொண்டு வீடு ஒன்றிற்குள் புகுந்த இருவர் வயோதிகப் பெண்மணியின் தங்கச்சங்கிலியினை அறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று புதன்கிழமை மதியம் கரணவாய் தெற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் தாம் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி மூதாட்டியின் வீட்டில் புகுந்து அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் நிறையுடைய தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிரீவி கமராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நெல்லியடி பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளில் சுகாதார பரிசோதகர் என கூறி திருட்டில் ஈடுபட்டுவரும் கும்பல் இவர்கள் என கூறப்படுகின்றது.
Related posts:
சந்திகளில் குழுமி நின்றால் ஆபத்து!
ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவலை நிராகரித்தது அரசாங்கம்!
சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு - 253 குடும்பங்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய ந...
|
|