எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானம்!

Friday, February 19th, 2021

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 23 ஆம் திகதி, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்கு விதி குறித்த விவாதம் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10 மணிமுதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றம் முற்பகல் 10 மணிமுதல் முற்பகல் 11.30 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், அன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு மாத்திரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாரவின் மறைவு தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினா நேரம் ஒதுக்கப்படாது எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: