இலங்கை போக்குவரத்து சபை – ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !

Thursday, November 12th, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார ஆலோசனைகள் காரணமாக பேருந்து மற்றும் ரயில்வே திணைக்களத்தின வருமானம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 75 மில்லியன் ரூபாவில் இருந்து 18 மில்லியன் ரூபா வரை குறைந்துள்ளது.

அதேபோன்று ரயில்வே திணைக்களத்தின் வருமானமும் 18 மில்லியன் ரூபாவில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா வரை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே கொரோனா நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் போக்குவரத்துத் துறைக்காக பல நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தனியார் போருந்து வண்டிகளுக்காக அறவிடப்படும் அனுமதிப் பத்திர கட்டணம், பிரமாதக் கட்டணம், கேள்விப் பத்திர கட்டணம், லொக் (log) படிவ கட்டணம், பிரவேசக் கட்டணம், தற்காலிக மார்க்க அனுமதிப்பத்திர கட்டணம் போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களில் அறவிடுவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று லீசிங் தவணைக் கட்டணங்களும் ஆறு மாத காலங்கள் அறவிடப்பட மாட்டாது. இலங்கை வங்கி மூலம் நிவாரணக் கடன் திட்டத்தின் கீழ், தலா மூன்று இலட்சம் கடன் வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார ஆலோசனைகள் காரணமாக பேருந்து சேவைகளை நடத்துவோர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: