தராசுகளில் மோசடி செய்த 59 வர்த்தகர்களுக்கு வழக்கு!

Sunday, January 20th, 2019

அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் அலுவலர்கள் 59 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கொட்டடி, நாவாந்துறை, சின்னக்கடை, கல்வியங்காடு, குருநகர் வாடி, காக்கைதீவு, சாவகச்சேரி, கொடிகாமம், மீன் சந்தைகளிலும் மரக்கறிச் சந்தைகளிலும் நிறையில் மாற்றம் செய்யப்பட்ட தராசுகள், நடப்பாண்டுக்கு முத்திரையிடாத தராசுகளும் பயன்படுத்தப்பட்டு வந்தை தெரியவந்துள்ளது.

யாழ் மாநகர், பருத்தித்துறை, நெல்லியடி, கொடிகாமம், சாவகச்சேரி,நாவற்குழி, புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள பழக்கடைகள், நகைக் கடைகள், பலசரக்குக் கடைகள் , விற்பனை நிலையங்கள் , வெதுப்பகங்கள், இரும்பகங்கள், புடைவைக் கடைகள், உர விற்பனை நிலையங்கள்  ஆகியவற்றிலும் இந்த வகையிலான தராசுகள் கண்டறியப்பட்டன.

மாவட்டச் செயலரின் பணிப்புரைக்கு அமைய சோதனை நடத்தப்பட்டு குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1995 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும் நியமங்களும் சேவைகளும் சட்டத்தின் பிரகாரம் நடப்பாண்டுக்குரிய முத்திரையிடாத நிறுக்கும் அளக்கும் உபகரணங்களை வர்;த்தகத்துக்குப் பாவிப்பது மாத்திரமல்லாது வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தராசுகள், நிறுவை அலகுகள் தொடர்பில் பொதுமக்கள் யாழ் மாவட்டச் செயலகத்திலுள்ள அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்துடன் (0212217399) தொடர்புகொள்வதன் மூலமாகவோ நேரடியாக அல்லது கடிதம் மூலமாக தொடர்புகொண்டு விடயங்களை அறிந்துகொள்ளலாம் என்று மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Related posts: