மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் தீர்வு – ஜனாதிபதி!

Tuesday, December 13th, 2016

வடக்கிலுள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்காதவாறு அனைவருக்குமான தீர்வைக் காணவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய ஹபரகட ஆர்ய நிகேதன பிக்குமாருக்கான பயிற்சி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் விடுதியைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கக்கூடிய அரசமைப்புடன், சமூக நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் அரசு செயற்படுகிறது.

பல நாடுகளில் இலட்சக்கணக்கான இலங்கைக் குடிமக்கள் அகதிகளாக உள்ளனர். வடக்கிலுள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்காதவாறு அனைவருக்குமான தீர்வைக் காணவேண்டும்.

நீண்ட காலமாக இடம்பெற்ற அபிவிருத்தி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் மிகவும் சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் 25 மாவட்டங்களுக்கும் நியாயமான அபிவிருத்திப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் பொறுப் பாக்கும்.

சமயப் பணியில் ஈடுபட்டுள்ள விகாரைகளைப் பலப்படுத்தும் அரச கொள்கைக்கமைய தற்போதய அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது” – என்றார்.

President-Maithripala-Sirisena-Writes-to-Mahinda-Rajapaksa-Prime-Minister-should-be-handed-over-to-a-senior-member-of-the-Sri-Lanka-Freedom-Party-who-has-not-yet-been-granted-this-opportunity.

Related posts: