மற்றவர்களுக்காக விமான நிலையங்களை திறக்க அனுமதித்து எமது மக்களை ஆபத்தில் விழுத்த முடியாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, September 4th, 2020

விமான நிலையங்களை மீளவும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் –

“குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் ஆழமான விவாதிக்கப்பட்டது. நாட்டில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எமது முன்னுரிமை. மற்றவர்களுக்காக விமான நிலையங்களை திறக்க அனுமதிப்பதன் மூலம் நாட்டில் வாழும் மக்களை நாம் ஆபத்தில் ஆழ்த்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனிடையே, இதுவரையில் சுமார் 26,000 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 58,000 பேர் நாடு திரும்ப எதிர்ப்பார்த்துள்ளனர். இலங்கையர்கள் மீளவும் திருப்பி அனுப்பப்படும் போது நாங்கள் சரியான திட்டத்தை கையாண்டு வருகிறோம்.

இலங்கையர்களை மீளவும் நாட்டிற்கு திருப்பி அனுப்ப தூதரகங்கள் மூலம் வெளிநாகளால் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அனைவரையும் ஒரே நேரத்தில் திருப்பி அனுப்புவதன் மூலம் இங்கு வசிக்கும் இலங்கையர்களை நாங்கள் ஆபத்தில் ஆழ்த்த முடியாது, ”என்று அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: